#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! யார்னு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சிம்பு. அதனைத் தொடர்ந்து உடல் எடை அதிகரித்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. பின்னர் சிம்பு தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
பின்னர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கும் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கிய நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.