மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜனனியிடம் த்ரிஷா கூறிய விஷயம்.. அதிர்ச்சியில் பிக்பாஸ் ஜனனி.?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜனனி. இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில நாட்களிலேயே வெளியேறினாலும், அவரது கியூட்டான பல்வேறு முகபாவனைகளால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு தமிழில் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் வெளியான "லியோ" திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஜனனி நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மேலும் பட வாய்ப்புகள் வரும் நிலையில், ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஜனனி, " விஜய் சாருடன் நடிப்பேன் என்றெல்லாம் கனவில் கூட நினைத்ததில்லை. படப்பிடிப்பில் அவரிடம் நான் நிறைய விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
மேலும் த்ரிஷா மேடம் என்னிடம் பேசும்போது ' நீ பார்க்க சாய் பல்லவி போல் இருக்கிறாய்' என்று கூறி என்னை வெட்கத்தில் ஆழ்த்தினார். என்னால் அவர் கூறியதை நம்பவே முடியவில்லை" என்று ஜனனி கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் "என்ன த்ரிஷா இப்படி சொல்லிடீங்க" என கலாய்த்து வருகின்றனர்.