மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளையராஜாவுடன் தகராறு.. கலைஞருடனான வரலாறை சுட்டிக்காட்டி ட்வீட் போட்ட வைரமுத்து..!
பாடல் காப்புரிமை விவகாரம் :
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து ஒரு பட விழாவில் பேசிய போது, மொழி பெரியதா? இசை பெரியதா என்று பேசி இளையராஜாவை மறைமுகமாக சாடி இருந்தார். அதாவது, இளையராஜா தனது பாடல்களுக்கு தனக்கான காப்புரிமை வழங்க வேண்டும் என்று வேண்டி இருந்த நிலையில் அதற்கான பாடல் வரிகளை எழுதியவருக்கு அந்த உரிமை இல்லையா என்ற விவாதம் எழுந்தது.
கங்கை அமரன் எதிர்ப்பு :
இது பற்றி பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்த நிலையில், இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், வைரமுத்துவை விமர்சிக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அடுத்து வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் மக்கள் எனக்காக பேச ஆரம்பித்து விட்டார்கள் இனி நான் பேசப்போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இதுமட்டும் நிறைவேறிவிட்டால்.. அருள்கூர்ந்து ஆதரவு தாருங்கள்.! கவிஞர் வைரமுத்து விடுத்த கோரிக்கை!!
கருணாநிதியை நினைவு கூர்ந்த வைரமுத்து :
இந்த போர் ஓயாத நிலையில் மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி குறித்து ஒரு பதிவை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்,"கலைஞருக்கும்,
அ.இ.அ.தி.முகவிலிருந்து
தி.மு.கவில் வந்து சேர்ந்த
ஒரு முக்கியப் புள்ளிக்கும்
நடந்த உரையாடல்
எனக்கு
வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு
கலைஞரையே கேட்டு
உறுதி செய்தது
சொற்கள் மாறியிருக்கலாம்;
சொன்னபொருள் இதுதான்
'வைரமுத்த
ரொம்ப நம்பாதீங்க தலைவரே!'
'ஏன்? எதனால?'
'அவரு உங்களைப்
புகழ்ந்து பேசுறாரே தவிர
ஜெயலலிதாவ எப்பவும்
திட்ட மாட்டேங்குறாரு'
(கலைஞர்
சிறு சிந்தனைக்குப் பிறகு)
'நீ அங்க இருந்து
இங்க வந்திருக்க
அங்க இருந்தபோது
என்னத் திட்டுன;
இங்க இருந்து
அந்த அம்மாவத் திட்டுற
வைரமுத்து
எப்பவும் இடம் மாறல
ஜெயலலிதா வைரமுத்துக்கு
எதிரியும் இல்ல
அவரு தமிழுக்காக
நம்மகூட நிக்கிறாரு
இன்னொண்ணு
அவரு யாரையும் திட்டமாட்டாரு;
அது அவரு இயல்பு'
கோள் சொன்னவர்
குறுகிப்போனார்
இப்படித்தான்
கேடுகள்
ஈட்டி எறியும்போதெல்லாம்
கேடயமாவது சத்தியம்" என்று தெரிவித்து இருக்கிறார்.
இதுவும் இளையராஜாவை வம்பு இழுக்கக்கூடிய நோக்கமா? அல்லது திமுகவினரை தனக்கு ஆதரவாக பேச வைப்பதற்காக இவ்வாறு செய்கிறாரா என்ற சந்தேகத்தை நெட்டிசன்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இசை காப்புரிமை விவகாரம்; வைரமுத்து அதிரடி ட்விட்.!