#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரஜினிகாந்த் குறித்து வீரப்பன் கூறியது என்ன? - வைரல் வீடியோ உள்ளே.!
மறைந்த சந்தனக்கடல் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கூஸ் முனிசாமி வீரப்பன் என்ற தொடரில் ஆவணப்படமாக்கி ஜீ தமிழ் குழுமம் டிசம்பர் 14ம் தேதி வெளியிடுகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ரஜினி குறித்து வீரப்பன் பேசிய காணொளி சுருக்கம் ஒன்று ஜீ தமிழ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் ரஜினிகாந்த் குறித்து பேசுகையில், "எம்.ஜி.ஆர் கஷ்டப்பட்டு வந்தவர். அவருக்கு எல்லாமே தெரியும். எம்.ஜி.ஆர் போல பிள்ளை பிறப்பது கஷ்டம். ரஜினிகாந்த்-தும் அதேபோன்றவர் தான். ரஜினி அனைவரையும் மதிப்பார். தெய்வபக்தி மிகுந்தவர்.
ஐயா ரஜினிகாந்த் அவர்களே உங்களிடம் நான் நேரடியாக பேசுகிறேன். யாரையும் நீ நம்பாதே. உன்னை பயன்படுத்தி உன்னை வீழ்த்துவதற்கு பல கூட்டம் காத்திருகிறது. யாரையும் ஆதரிக்காதே" என தெரிவித்துள்ளார்.
Veerappan's message to Rajinikanth!#KooseMunisamyVeerappan Premieres on Dec 14 #HBDSuperstarRajinikanth #HappyBirthdaySuperstarRajinikanth #HBDRajinikanth #VeerappanOnZEE5 #UnseenVeerappanTapes #Veerappan #ZEE5Tamil #ZEE5 pic.twitter.com/DBvtojfGxp
— ZEE5 Tamil (@ZEE5Tamil) December 12, 2023