#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யோகி பாபு நடித்து வரும் "வீரப்பனின் கஜானா".! வேண்டுகோள் விடுத்த வீரப்பன் குடும்பத்தினர்.! ஓகே சொன்ன படக்குழுவினர்.!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவர் ஆரம்ப காலத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாகவும் அவதாரமெடுத்துள்ளார். கடைசியாக அவர் நடித்த மண்டேலா படம் ஓடிடியில் ரிலீஸாகி வெற்றி பெற்றது.
இந்தநிலையில், தற்போட்டது வீரப்பன் கஜானா என்ற படத்தில் நடிக்கிறார் யோகிபாபு. இந்த படத்தை அறிமுக இயக்குனர் யாசின் இயக்குகிறார். அந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
அறிமுக இயக்குநர் யாசின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வீரப்பனின் கஜானா' படம் காடுகளின் பெருமையை கூறும் வகையிலும், மற்றும் நகைச்சுவை கலந்து ரசிகர்களை கவரும் படமாக உருவாகி வருகிறது. இதில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், படத்தின் பெயரை மாற்றும்படி சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் குடும்பத்தினர், வீரப்பன் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கு படக்குழுவினரும் சம்மதித்து, அவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் படக்குழுவினர் 'வீரப்பனின் கஜானா' என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர். எனவே, இப்படத்தின் புதிய தலைப்பை விரைவில் அறிவிக்கவுள்ளது படக்குழு.