திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த டிவி நிகழ்ச்சியை உடனே நிறுத்துங்கள், இல்லையென்றால்.. கமலுக்கு மிரட்டல் விடுத்த முக்கிய பிரபலம்!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. மேலும் காதல் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் எதற்கும் பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் அணியும் உடைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு எனவும், இதுபோன்ற டிவி நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லையெனில் எங்கள் வேலையை நாங்கள் காட்டுவோம் என சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மிரட்டல் விடுத்தார்.
இந்தநிலையில் இதுதொடர்பாக தற்போது பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், இது வேண்டுகோள்தான், மிரட்டல் கிடையாது. இதே தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்பு கேரளப்பெண்கள் அழகா தமிழ் பெண்கள் அழகா என்ற விவாதம் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது.அதனை தொடர்ந்து அதை நிறுத்தச் சொல்லி நாங்கள் வேண்டுகோள் வைத்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியை நிறுத்தினர்.
இப்போதும் அதே சேனலில் பண்பாட்டுச் சீரழிவை உண்டாக்கும் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தநிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தவேண்டும் இல்லையெனில், அதை நிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என எச்சரிக்கைதான் விடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.