மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த வெற்றிமாறன்; உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்..!
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், அனிரூத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ஜியார்ஜ் மரியான் உட்பட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லியோ.
ரூ.300 கோடி பொருட்செலவில் தயாரான திரைப்படம், ரூ.600 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, படத்தின் வெற்றிவிழா சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் வெற்றிவிழாவில் பேசுகையில், "படத்தின் தொடக்கத்தில் கிடைத்த வரவேற்பு, வெற்றி, இன்று வெற்றிவிழாவுக்கு வந்துள்ளது. எனது கனவு பயணம் தொடர்கிறது. இசை வெளியீடு விழா நடைபெறவில்லை என்பது எனக்கும் வருத்தமே.
நானும் மிகுந்த சோகத்தில் இருந்தேன். ப்ரமோஷன் நிகழ்ச்சியையும் தவிர்த்தேன். ஆனால், எனது துணை இயக்குனர்கள் எனக்கான ஊக்கத்தை அளித்து வெற்றியை கொடுத்தார்கள். அவர்கள் எனக்காக பிலோ ஸ்டுடியோவில் வைத்து மாடிப்படிக்கட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார்கள்.
முதலில் படத்திற்கு விஜய் சம்மதம் சொன்னதும், அவருக்காக உழைத்தேன். உழைப்பை அடைந்ததாகவும் நினைத்தேன். ஆனால், சிலர் படத்தில் பல குறைகளை கூறினார்கள். படத்தின் இரண்டாம் பாகம் சரியில்லை என்றார்கள். ஆனால், நான் நேரடியாக திரையரங்கம் சென்று பார்த்தேன், மக்கள் ஒவ்வொருவரும் படத்தை ரசித்தார்கள்.
நான் இயக்குனர் வெற்றிமாறனை எனது 3 படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என எண்ணிப்பார்த்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நான் நடிக்கமாட்டேன் என கூறிவிட்டார்" என்று பேசினார்.