மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதலை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வுளவு தெரியுமா?.. திரையரங்கில் மக்கள் கொண்டாடும் விடுதலை.!
ஜெயமோகனின் துணைவன் நாவலை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மார்ச் 31ம் தேதியான நேற்று திரையரங்கில் வெளியாகின.
சூரி கதாநாயகனாக நடித்துள்ள வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தில், விஜய் சேதுபதி முக்கிய துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த காலங்களில் காவலர்கள் மக்களுக்கு எதிராக எப்படி அதிகாரத்தை பயன்படுத்தினார்கள் என்பவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த படம் திரையரங்கில் நேற்று வெளியான நிலையில், படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.6.5 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்றும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.