96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அட. இரண்டாவது ஹனிமூனா.! இப்போ எங்கு தெரியுமா? ரொமான்ஸ்ஸுடன் பறந்த விக்கி நயன் ஜோடி!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி தரிசனம், தாய்லாந்தில் ஹனிமூன் என பிஸியாக இருந்து வந்தனர். தொடர்ந்து நயன்தாரா ஹிந்தியில் ஷாரூக்கானுடன் இணைந்து நடிக்கும் ஜவான் பட படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஓய்வு எடுப்பதற்காக ஸ்பெயின் பறந்துள்ளனர். அங்கு அவர்கள் 10 நாட்கள் தங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து நயன்தாரா ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். விக்னேஷ் சிவனும் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் பணிகளைத் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.