ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தளபதி விஜய் விழியகத்தின் முதல் கண் தானம்! ரசிகரின் செயலால் நெகிழ்ச்சி!!
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் இரவு நேர பயிலகம், சட்டம் அறிவது குறித்த பயலகம் என்று பல நல்உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் 'தளபதி விஜய் விழியகம்' என்னும் கண்தான அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 70 ஆயிரத்திற்கும் மேலான விஜய் ரசிகர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கரண் என்பவரும் இந்த அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்திருந்தார். கடந்த 12ம் தேதி கரண் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாரும், சகோதரரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் கரணின் கண்களை தானமாக வழங்கியுள்ளனர்.
இது குறித்த சான்றிதழ் கரணின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விஜயின் தளபதி விஜய் விழியகம் அமைப்பு தொடங்கப்பட்டு முதல் கண் தானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.