திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கார்த்தியை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்.! எதற்காக தெரியுமா.?
கோலிவுட் திரையுலகில் நடிகர்களின் பஞ்சாயத்தை விடவும், அவர்களுடைய ரசிகர்களின் பஞ்சாயத்து தான் எப்போதும் அதிகமாக இருக்கும். ஒரு நடிகர் தொடர்பாக இன்னொரு நடிகர் பெரிய அளவில் பேசக்கூட இயலவில்லை. அப்படி பேசினால், அது ரசிகர்கள் மூலமாக மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து விடுகிறது.
அதிலும் அஜித், விஜய் உள்ளிட்டோரின் ரசிகர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களைப் பற்றி ஏதாவது ஒரு விஷயத்தை பிரபலங்கள் நெகட்டிவாக பேசிவிட்டால், எப்படி அவரை அப்படி கூறலாம் என்று பெரிய பிரச்சினையாக்கி விட்டு விடுகிறார்கள்.
அந்த வகையில், தற்போது பிரபலம் ஒருவர் தெரிவித்த சாதாரண விஷயம் சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிரபல நடிகரான கார்த்தி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது, அவரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் லியோ திரைப்படத்தை பார்த்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு நடிகர் கார்த்தி இன்னும் பார்க்கவில்லை என்று தெரிவித்ததால், விஜய் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். கைதி திரைப்படம் LCU வில் தானே வருகிறது? நீங்களே லியோ திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லையா? என்று வழக்கம்போல கார்த்தியை வசை பாடத் தொடங்கி விட்டனர்.