#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொடங்கியது தளபதி 65 ஷூட்டிங்! நடிகர் விஜய் எங்கிருக்கிறார் பார்த்தீர்களா! செம ட்ரெண்டாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோனாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பூஜை விழா நடைபெற்றது.
#Thalapathy65 shooting has started in Georgia! @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja pic.twitter.com/tuMnc5393k
— Sun Pictures (@sunpictures) April 9, 2021
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து வாக்களித்தார். இந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் டிரெண்டானது. பின்னர் ஓட்டு போட்ட கையோடு அவர் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா புறப்பட்டார். இந்நிலையில் தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் இயக்குனர் நெல்சன் நிற்கும் புகைப்படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.