மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாவுக்கு அடுத்தப்படியாக தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர் தான்... துருவ் விக்ரம் ஓபன் டாக்.!
தமிழில் பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அன்றும் இன்றும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விக்ரம். தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பில் சிறந்து விளங்கும் நடிகர் விக்ரமுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதேபோல் அப்பாவிற்கு தப்பாத பிள்ளை என்பதை போல விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் உள்ளார். இவரின் முதல் படமான ஆதித்யா வர்மாவில் இவரின் நடிப்பை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். தந்தையை போல அந்த அளவிற்கு நடித்து பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது துருவ் தனது தந்தையுடன் இணைந்து மகான் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து பேட்டியளித்துள்ள துருவ் தனக்கு பிடித்த நடிகர்களுக்கு குறித்து சொல்லியுள்ளார். அதன்படி இங்கு அவருக்கு விஜய் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.