#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செம ஜாக்பாட்தான்.. பிரபல டாப் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி! வெளியான சூப்பர் தகவல்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்க கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து அசத்தக்கூடிய அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் களமிறங்கி கெத்து காட்டி வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட, விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தன் கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கும் விஜய்சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி மற்றும் உப்பென்னா என்ற படத்தில் ஹீரோயின் தந்தையாக, வில்லனாக நடித்திருந்த விஜய்சேதுபதி அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகவிருக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.