மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்ப்பா.. விஜய் தொலைக்காட்சி விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை எப்படி வந்துள்ளார் பார்த்தீர்களா! சொக்கவைக்கும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பைப் பெற்ற பாண்டியன் ஸ்டோர் தொடரில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. இத்தொடரில் முதலில் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்தார்.
அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்து வந்த காவியா முல்லையாக மாறினார். அவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. அதில் பிரபலங்கள் பலரும் அசத்தலாக கலந்துகொண்டுள்ளனர். அந்த விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை செம மாடர்னாக கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா நடிகைகள் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ஆகியோர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.