#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் சீசன்-3 நாளை துவக்கம்; விஜய் டிவியின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது போன்ற தொடர்களில் ஒன்றுதான் பிக்பாஸ். சீசன் 1 மற்றும் 2 இரண்டும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுமாபெரும் வெற்றி பெற்றது.
கடந்த இரண்டு தொடர்களையும் பிரபல நடிகர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் சீசனில் நடிகர் ஆரவ் பிக் பாஸ் பட்டத்தை கைப்பற்றினார். இரண்டாவது சீசனில் பிரபல தமிழ் நடிகை ரித்விகா பிக்பாஸ் கைப்பற்றினார், தற்போது சீசன் 3 நாளை 23ம் தேதி தொடங்க உள்ளது. இந்தச் சீனையும் உலக நாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்க உள்ளார்.
#BiggBossTamil 😎 நாளைக்கு நைட்டு 8 மணிக்கு ஆரம்பமாகுது உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/5WwQAZs7xb
— Vijay Television (@vijaytelevision) 22 June 2019
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இன்று உள்ளே செல்கின்றனர். இதன் தொடக்க நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கமல் கெத்தாக அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு ஒரு புதிய புரோமோவும் வெளியிட்டுள்ளது.
இன்னும் ஒரே நாள்ல.. #BiggBossTamil 😎 நாளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகுது..! #1DayToGo #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/0OcMsMItcw
— Vijay Television (@vijaytelevision) 22 June 2019
விஜய் டிவியின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காண மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். மேலும், நாளை ஒளிபரப்பாகும் தொடக்க நிகழ்ச்சியை காண மிகவும் உற்சாகமாக உள்ளனர்.