#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவியின் பிரபல நடிகர் வெளியிட்ட சூப்பர் தகவல் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், புது புது சீரியல்கள் என மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது விஜய் தொலைக்காட்சி. அதேபோல, விஜய் தொலைக்காட்சியில் வரும் பிரபலங்களும் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ப்ரஜன். பல வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார் ப்ரஜன். நடிகர் ப்ரஜன் சாண்ட்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் ப்ரஜன் மனைவி சாண்ட்ரா தற்போது கர்ப்பமாக உள்ளதாக நடிகர் ப்ரஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 10 வருடம் கழித்து தன் மனைவி குழந்தைபெற போவதை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ப்ரஜன்.