திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வடிவேல் பாலாஜி நிலைமை தெரியும்ல... ஆதங்கத்தில் KPY பாலாவுக்கு அறிவுரை கூறிய நெட்டிசன்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் வாயிலாக கலந்துகொண்டு பிரபலமடைந்த நடிகர் பாலா. தற்போது இவர் முக்கிய சின்னத்திரை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தனது முயற்சியில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
மக்களின் இலவச பயன்பாட்டிற்காக அவசர ஊர்தி வாங்கி கொடுப்பது, இல்லாதோருக்கு உதவி செய்வது என அவை தொடருகின்றன. சமீபத்தில் கூட சென்னை பெருவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னிடம் இருந்த சேமிப்பு பணம் ரூ.3 இலட்சத்தை குடும்பத்திற்கு ரூ.1000 என பிரித்துக்கொடுத்தார்.
இந்நிலையில், முகநூல் பக்கத்தில் ஜெய்சங்கர் என்பவரின் பதிவில், "பணத்தை சேமிக்கிற வழியை பாருங்க பாலா. வடிவேல் பாலாஜி உங்களை விட புகழ் பெற்றவர். உடல்நல குறைபாடால் இறக்கும் பொழுது யாரும் உதவி செய்ய முன்வரவில்லை..
இதுபோல் எத்தனையோ துணை நடிகர்கள். ஆம்புலன்ஸ் வாங்கி தருவதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. நீங்கள் எல்லாம் சின்ன தொலைக்காட்சி நடிகர்கள், இன்று இருக்கும் புகழ் பெயர் நாளை இருக்காது. உனக்கென ஒரு பிரச்சனை என்றால் இப்பொழுது பாராட்டக்கூடிய ஒத்த ஆள்கூட உதவ வரமாட்டார்கள்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள். இன்றைய சேமிப்பு நாளை உனது வாழ்வாதாரம்.. நல்லது செய்யறது நல்லதுதான்.. ஆனால் தனக்கு மிஞ்சினால்தான் தானம் என்பது பழமொழி. மக்களுக்கு ஞாபகமறதி அதிகம் பாலா. நாளை எல்லாம் மறந்து விடுவார்கள்" என கூறியுள்ளார்.