மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமா கெரியரில் புதிய உச்சத்தை தொட்ட நடிகர் விஜய்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விஜய். இவருக்கென்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படம் நடித்திருந்தார்.இந்த படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து இந்த படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன், திரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய சினிமா கெரியரில் புதிய உச்சத்தை படைத்துள்ளார். அதாவது லியோ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 207 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் 201 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளார் நடிகர் விஜய். இதனால் விஜய் தன்னுடைய சினிமா கெரியரில் புதிய உச்சத்தை படைத்துள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.