தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இவர்தான்யா எங்க சாமி!! ரியல் ஹீரோ சோனு சூட்டிற்காக இந்த கிராம மக்கள் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா!
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். இவர் திரையுலகில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நல்ல உள்ளம் படைத்த ஹீரோவாவார்.
இவர் கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில், கொரோனோவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்காக தனது 5 நட்சத்திர ஹோட்டலை வழங்கினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது, வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது, விவசாயிகளுக்கு உதவுவது என தொடர்ந்து ஏராளமான உதவிகளை செய்து வந்துள்ளார்.
மேலும், அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது 10 கோடி மதிப்பிலான சொத்தினை அடமானம் வைத்தார் எனவும் செய்திகள் பரவியது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்ப தண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் நடிகர் சோனு சூட்டின் இந்த நல்ல உள்ளத்தை, மனிதநேயத்தை பாராட்டி மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் அவருக்கு கோயில் கட்டியுள்ளனர். மேலும் இந்த கோயில் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து அந்த கிராம பெண்கள் சோனு சூட்டின் சிலை முன்பு நடனமாடி, அதற்கு ஆரத்தி எடுத்து அன்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.