மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவனுக்கு அப்பன்தான் முதல் வில்லன்.. ஒவ்வொரு செகண்டும் தெறிக்கவிடும் விருமன் ட்ரைலர்.! மாஸ் வீடியோ உங்களுக்காக!!
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அவரது சகோதரர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தை கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். விருமன் படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
விருமன் படத்தில் ஹீரோயினாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இதில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் நேற்று விருமன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. கிராமத்து கதை அம்சம் கொண்ட, குடும்பம் மற்றும் உறவுகளை குறித்த இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரைலரில் ஒவ்வொரு செகண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
எல்லாருக்கும் அப்பா தான் முதல் ஹீரோ, ஆனா விருமனுக்கு அப்பன்தான் முதல் வில்லன். இதோ #VirumanTrailer உங்களுக்காக.
— Actor Karthi (@Karthi_Offl) August 3, 2022
▶️ https://t.co/UvqHQoyBwI#VirumanFromAug12@Suriya_offl @dir_muthaiya @AditiShankarofl @rajsekarpandian @thisisysr @2D_ENTPVTLTD @SonyMusicSouth#Viruman #விருமன்