#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலர் தினம் - வருங்கால மனைவியுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட விஷால்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். நடிப்பையும் தாண்டி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் என படு பிசியாக உள்ளார் விஷால். இந்நிலையில் அயோக்கியா பட பிடிப்பிலும் பிசியாக இருக்கும் விஷாலுக்கும், அனிஷா என்ற பெண்ணிற்கும் திருமணம் என செய்திகள் வந்தது.
விஷாலும், வரலெக்ஷிமியும் காதலிப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த செய்தி அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஷால். அனிஷா என்ற பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் காதலர் தினமான இன்று, உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் அனைவரும் காதலர் தினத்தை கொண்டாடி வரும் வேளையில் தனது காதலியின் நெற்றியில் முத்தமிட்டவாறு நடிகர் விஷால் புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.
Happy Valentine’s Day #anisha 😘😘😘 pic.twitter.com/PiXiLYsIMb
— Vishal (@VishalKOfficial) February 14, 2019