மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கன்னடத்தில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இதுதான் நிலைமையா? வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவரது படங்கள் வெளியிடும் நாட்களில் ரசிகர்கள் திருவிழா போல மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விஸ்வாசம். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மகளுக்கும் தந்தைக்கும் இடையே உள்ள அன்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு குடும்பத்தார்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது. மேலும் 50 நாட்களை கடந்தும் இத்திரைப்படம் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விஸ்வாசம் படம் கன்னடத்தில் ஜகமாலா என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அதற்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்து பெரும் மாலை போட்டு அசத்தியுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Banners ,cutout getting ready for #Viswasam kannada dub #Jagamalla release from march 7 - Karnataka Thala fans 🎉🎉🎉🎉🎉🎉 pic.twitter.com/uI1YhFrSGs
— THALA ADDICTS👑 (@thala_addicts) 4 March 2019