தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மனைவியை விட்டு மற்றொரு பெண்ணுடன் இருந்த பிரபல தயாரிப்பாளர்.. நேரில் கண்ட மனைவி கார் ஏற்றி கொலைமுயற்சி..!!
வேறொரு பெண்ணுடன் காரில் இருந்த பிரபல தயாரிப்பாளரிடம் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை கார் ஏற்றி கொல்ல முயன்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேஹாட்டி டிஸ்கோ, காலி பாலி, சர்மா ஜி கி லக் கயி உள்ளிட்ட பல பாலிவுட் படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. இவர் மும்பை, அந்தேரி மேற்கு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங் பகுதியிலிருந்து காரை எடுத்துக்கொண்டு செல்ல தயாராகவே, அவரின் மனைவி யாஸ்மின் மிஸ்ராவை தேடி கார் பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது மிஸ்ரா காரில் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த யாஸ்மின் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பி செல்லும் முயற்சியில் மிஸ்ரா காருடன் வேகமாக புறப்பட்டுள்ளார். இதில் அவரது மனைவி மீது இடித்ததில், அவர் அடிபட்டு கீழே விழுந்து கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் சம்பவ இடத்திலிருந்து அவர் தப்பி சென்றுள்ளார். பின் இதுதொடர்பாக போலீசில் புகாரளிக்கவே, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த காவல்துறையினர் மனைவியை காரால் இடித்து தலைமறைவாகிய தயாரிப்பாளர் மிஸ்ரா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.