மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையாடா... லியோ படம் பார்க்க வந்து திரையரங்கிலேயே திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இளம் ஜோடி!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏழு மணி காட்சிக்கு அனுமதி வழங்காததால் காலை 9 மணிக்கு படம் வெளியானது. ஆனால் விஜய் ரசிகர்கள் காலையில் இருந்ததே திரையரங்குகள் முன் மேளம், தாளங்களுடன் ஆடிப்பாடி கொண்டி வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் படம் பார்க்க வந்த ஒரு இளம் ஜோடியினர் திரையரங்கிலேயே மோதிரம் மாற்றிக் கொண்டு திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.