மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வினுஷா,யுகேந்திரன்.! அடேங்கப்பா.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், வித்தியாசமான டாஸ்க்குகளால் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரத்திலேயே அனன்யா ராவ் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து பாவா செல்லத்துரை தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை எனக்கூறி தானாகவே வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார். மேலும் நேற்று யுகேந்திரன் மற்றும் வினுஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது. அதாவது 28 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த யுகேந்திரன் ஒரு நாளைக்கு 27 ஆயிரம் வீதம் இதுவரை ரூ 7
லட்சத்து 56 ஆயிரம் மற்றும் வினுஷா ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.