எச்சரிக்கை... வைட்டமின் பி12 குறைபாடு.!! இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவர் அணுகுங்கள்.!!



vitamin-b12-deficiency-symptom

நம் உடலின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் முதன்மையானது வைட்டமின் பி12. இந்த வைட்டமின் உடலின் மிக முக்கிய உறுப்புகளின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயம் மற்றும் மூளை ஆகியவற்றின் இயக்கத்திலும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியிலும் வைட்டமின் பி12 பங்கு முக்கியமானது. இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் உடலுக்கு என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கல்

நம் உடலில் வைட்டமின் பி2 சத்து குறையும் போது இரைப்பை மற்றும் குடலின் இயக்கங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் வயிறு உப்புதல் வாயு மற்றும் மலச்சிக்கல் ஏற்படும். இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக ஏற்பட்டால் மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொள்வது சிறந்ததாகும்.

Healthy life

ஒற்றைத் தலைவலி

வைட்டமின் பி12 குறைபாட்டின் மற்றொரு அறிகுறி ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரேன். அடிக்கடி இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படுவது வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே ஒருவர் ஒற்றைத் தலைவலியால் அடிக்கடி அவதிப்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது.

இதையும் படிங்க: வாவ்... கருஞ்சீரகம் புற்று நோயை குணப்படுத்துமா.? ஆய்வுகள் என்ன சொல்கிறது.?

சோர்வு

இது வைட்டமின் பி12  குறைபாட்டின் முக்கியமான அறிகுறி ஆகும். சிலருக்கு காரணமே இல்லாமல் உடல் பலவீனமடைந்து சோர்வடைந்து காணப்படுவார்கள். இவ்வாறு இருக்கும்போது மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது சிறந்ததாகும். மேலும் உடல் பலவீனமடைந்து காணப்படுவதும் வைட்டமின் பி12 குறைபாட்டின் மற்றொரு அறிகுறி ஆகும். இந்த வைட்டமின் பற்றாக்குறையால் உடல் தளர்ந்து பிடிப்புகள் ஏற்படும்.

இதையும் படிங்க: ரத்த சோகையா.? கண் பார்வை குறைபாடா.? கவலை வேண்டாம்.!! முருங்கைக் கீரையில் இருக்கும் அற்புதம் மருத்துவ குணங்கள்.!!