வாவ்... கருஞ்சீரகம் புற்று நோயை குணப்படுத்துமா.? ஆய்வுகள் என்ன சொல்கிறது.?



is-black-cummin-seeds-a-cure-for-cancer-research-detail

உணவே மருந்து என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் நம்மை தாக்கும் உயிர்க்கொள்ளி நோய்களுக்கான மருந்தும் இருக்கிறது. அப்படிப்பட்ட அற்புதமான ஒரு உணவு பொருள் தான் கருஞ்சீரகம். இந்தக் கருஞ்சீரகத்தில் மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்து உண்டு என இஸ்லாமியர்களின் இறை தூதனான முகமது நபி கூறியிருக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கருஞ்சீரகத்தின் மருத்துவ நன்மைகளை காணலாம்.

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்

அனைத்து நோய்க்கும் மருந்தாக பயன்படும் கருஞ்சீரகத்தில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இதில் காணப்படும் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் மற்றும் கெட்ட கொழுப்பை அகற்றக் கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கருஞ்சீரகத்தில் அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியமும் நிறைந்திருக்கிறது.

Healthy life

புற்று நோய்க்கு மருந்தாக பயன்படும் கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய செல்களை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் இவை எலும்பு மஜ்ஜை வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் கருஞ்சீரகத்தின் புற்று நோய் எதிர்ப்பு பண்புகள் பற்றி நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் என்ற இணையதள பக்கத்திலும் பல்வேறு தகவல்கள் இருக்கிறது. கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயினன் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மையை பெற்றிருப்பதோடு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ரத்த சோகையா.? கண் பார்வை குறைபாடா.? கவலை வேண்டாம்.!! முருங்கைக் கீரையில் இருக்கும் அற்புதம் மருத்துவ குணங்கள்.!!

கருஞ்சீரகத்தின் பிற நன்மைகள்

கருஞ்சீரகம் புற்றுநோயை கட்டுப்படுத்த உதவுவதோடு இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் காணப்படும் தைமோகுயினன் வேதிப்பொருள் கெட்ட கொழுப்புகளை கரைக்கக் கூடியது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. மேலும் கர்ப்பப்பை ஆரோக்கியம், சளி, இருமல், சுவாச பிரச்சனைகள் போன்றவற்றிற்கும் கருஞ்சீரகத்தில் சிறந்த தீர்வு இருக்கிறது என பண்டைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: எச்சரிக்கை... கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவு பொருள்கள்.!! டாக்டர்களின் அறிவுரை.!!