திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் உயிரை மாய்த்த சீரியல் நடிகை; சோகத்தில் ரசிகர்கள்.!
சிறுநீரக நன்மைக்காக நாம் செய்ய வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!
மனிதனின் உடல் இயக்கத்திற்கு தேவையான முக்கிய உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகம் இருக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் சார்ந்த பிரச்சினை மற்றும் நோய் தொற்று, நமது உடலை நோய்களுக்கும் உட்படுத்தும். சிறுநீரில் இருக்கும் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியது முக்கியமானதாகும்.
அந்த வகையில், இன்று சிறுநீரக நலனுக்காக நாம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் குறித்து காணலாம். சிறுநீரக நன்மையை பொறுத்தவரையில், காய்கறிகள், அதிகம் மெக்னீசியம், புரதம் நிறைந்த மீன் போன்ற உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம். சிறுநீரக சுத்திகரிப்பு பொறுத்தவரையில், முதல் விஷயம் நாம் தேவையான அளவு நீரை குடிப்பது.
முட்டைகோஸ், பூசணி, மீன் சாப்பிடலாம்
நமது உடலில் இருக்கும் திரவ வடிவிலான கழிவுகளை சிறுநீரகம் இயற்கையாக வெளியேற்றுகிறது. அதனை வெளியேற்ற நாம் நீர் குடிப்பது அவசியமாகிறது. குறைந்த ஆக்சலேட் கொண்ட முட்டைக்கோஸ், பேரிச்சம்பழம், கீரை, காய்கறி, பழங்களை சாப்பிடலாம். பூசணி விதைகள், இலை கீரைகள், வெண்ணெய் போன்றவை சிறுநீரகத்தில் இருக்கும் நச்சு விளைவிக்கும் பொருளை எதிர்க்க உதவி செய்யும். மீனில் உள்ள புரதம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய வரப் பிரசாதம் ஆகும்.
இதையும் படிங்க: இன்னும் தூங்காம தான் இருக்கீங்களா.?! இது உங்களுக்கு தான்.!
மேலும், இதய நோய்களும் இது கட்டுப்படுத்த உதவுகிறது. அதிகளவு உடலுக்குத் தேவையான தண்ணீரை குடிப்பது ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும், சிறுநீரகங்கள் தொடர்ந்து இயங்கவும் உதவி செய்கிறது. அதிக உப்பு - சோடியம் சார்ந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் தலை குளிப்பவரா நீங்கள்.?! இது உங்களுக்கு தான்.. இவ்வளவு ஆபத்தா.?!