மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையும், தீர்வும்.!
குழந்தைப்பேறு அடைந்த பெண்கள் தங்களின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுவார்கள் என்பதால், தாயின் உடல்நல பிரச்சனைகளால் குழந்தைகளுக்கு ஒவ்வாமைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளன.
பாலூட்டும் தாய்மார்கள் மலமிளக்கிய மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்க அதிகளவு நீர் குடித்தல், ஓய்வெடுத்தல், மலமிளக்கும் வகையில் உள்ள உணவுகள் சாப்பிடுதல் போன்ற செயல்களை பின்பற்ற வேண்டும்.
பிரசவத்தின் போது ஏற்படும் மலக்குடல் அதிர்ச்சி, ஊட்டச்சத்து குறைபாடு, வாழ்க்கை முறை, ஹார்மோன் பிரச்சனை போன்றவை பாலூட்டும் தாய்மார்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தின் போது மலச்சிக்கல் என்பது உடலியல் மற்றும் விதிமுறை மாறுபாடு ஆகும்.
குழந்தைகளுக்கு பாலூட்ட தொடங்கியதும் பெண் தனது உடல்நலம், குடல் நிலை, செரிமான மண்டலம் போன்றவற்றை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். நீண்ட காலம் மலம் வைத்திருப்பது உடல் நலத்தை பாதிக்கும். இளம் தாய் மற்றும் குழந்தைக்கு தீங்கை ஏற்படுத்தும். இந்த நேரங்களில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த சமயங்களில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுதலையாக, ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறிகள் நன்கு வேக வைக்கப்பட்டு சாப்பிட வேண்டும். மலப்பிரச்சனையை தவிர்க்கும் வகையில் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.
காரசாரமான, வறுத்த மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட கூடாது. கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர் பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இறைச்சி உணவுகளை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், அதனை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை சரியாக சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை அல்லது அனுமதி இன்றி மாத்திரை சாப்பிட கூடாது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே உணவு என்பதால், நீங்கள் சாப்பிடுவது தான் குழந்தைகளுக்கு உணவாகிறது என்பதை மறக்க வேண்டாம்.
தினமும் நார்சத்து நிறைந்த கீரை வகை உணவுகள், கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் பால் சுரப்பும் சீராக இருக்கும், மலச்சிக்கல் பிரச்சனையும் தடுக்கப்படும். தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகளுக்கும் செரிமான பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.