தினமும் கறிவேப்பில்லை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் இதோ.!



Daily Eat Benefits of Karivepillai or Curry tree 

 

தென்னிந்திய சமையலில் ஒவ்வொரு உணவிலும் சிறிதளவு கறிவேப்பில்லை சேர்ப்பது வழக்கமான ஒன்று. இந்தியா மற்றும் இலங்கையில் உணவில் இவை சேர்க்கப்படுகிறது. 

கறிவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தினமும் காலை நேரத்தில் நாம் பச்சையாக சிறிதளவு கறிவேப்பில்லை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராகும். 

உடலில் இருக்கும் கேடான கொழுப்புகள் அனைத்தும் கரைத்து வெளியேற்றப்படும். நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். செரிமான பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக கறிவேப்பில்லை செயல்படும். 

தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்போர், கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வர முடி நன்றாக வளரும், கருநிறமாகவும் இருக்கும்.