மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண் பார்வை குறைபாடா.? கவலை வேண்டாம்... இந்த ஒரு பானம் போதும்.!! சூப்பரான டிப்ஸ்.!!
ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை கண்பார்வை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஒருவருக்கு நன்றாக பார்வைப் புலன் இருந்தால் பிறரது உதவியின்றி தங்களது வேலைகளை செய்து கொள்ள முடியும். தற்காலத்தில் அதிகமான கணினி பயன்பாடு மற்றும் செல்போன் பயன்படுத்துவது காரணமாக பலருக்கும் பார்வை குறைபாடு இளம் வயதிலேயே ஏற்படுகிறது. இந்தப் பார்வை குறைபாட்டை சரி செய்து 80 வயது வரை துல்லியமாக பார்க்கக்கூடிய திறனை கொடுக்கும் பானத்தைப் எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாகை பூ மற்றும் மரத்தில் இருக்கும் சத்துக்கள்
பொதுவாக வாகை மரம் வீடுகளில் அழகிற்கு வளர்க்கப்பட்டாலும் இவற்றின் பூ, இலை, பட்டை மற்றும் வேர்களில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இந்த வாகை மரத்தில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வாகை பூவிலிருந்து தயாரிக்கப்படும் பானம் கண்பார்வை திறனை அதிகரிக்கிறது. இந்தப் பானம் எவ்வாறு தயார் செய்வது இதற்கு தேவைப்படும் பொருட்கள் என்ன என்பது பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள்
இந்த பானம் செய்வதற்கு 1 வாகை பூ, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு மற்றும் 1 1/2 கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: அடடே... குப்பை மேனியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்.!!
செய்முறை
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் 1 தேக்கரண்டி பொடித்து வைத்த சீரகத்தை சேர்த்து கொதிக்க விடவும். இந்தக் கலவை 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்து ஒரு கிளாசில் வடிகட்டி கொள்ள வேண்டும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வர வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து பருகி வரும் போது கண் பார்வை குறைபாடு கண்வலி மற்றும் கண் எரிச்சல் போன்றவை நீங்கும்.
இதையும் படிங்க: மறந்தும் ஆப்பிளுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடாதீங்க.!!