மாரடைப்பிற்கும் வாய் சுகாதாரத்திற்கும் உள்ள தொடர்பு.!! மருத்துவர்கள் பகிர்ந்து அதிர்ச்சி தகவல்.!!



link-between-heart-attack-and-oral-hygiene-doctors-shar

உலகில் பெரும்பாலான மனிதர்களின் இறப்பிற்கு முக்கிய காரணமாக அமைவது மாரடைப்பாகும். ஒவ்வொரு வருடமும் 17.9 மில்லியன் மக்கள் மாரடைப்பால் மரணம் அடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது பலவிதமான அறிகுறிகள் தென்படும். அப்போது உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட நபரின் உயிரை காப்பாற்றலாம். பொதுவாக மாரடைப்பிற்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவை காரணமாக அமைகிறது. எனினும் ஈறுகளில் உள்ள பிரச்சனை மற்றும் வாய் சுகாதாரம் மாரடைப்போடு தொடர்புடையது எனக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளனர்.

மாரடைப்பு

மாரடைப்பு என்பது மயோகார்டியல் இன்ப்ராக்ஷன் என்ற நிலையில் ஏற்படும் இதய நோயாகும். இதில் இதயத் தசைகளுக்கு போதுமான அளவு ரத்தம் கிடைக்காததால் இதயத் தசைகள் இறக்கத் தொடங்கும். இந்த நிலையில் உடனடியாக நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளித்து ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயம் செயல் இழப்பதை உடனடியாக தடுக்க வேண்டும். இல்லையென்றால் இதய அசைகள் முழுவதுமாக இறந்து இதய செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழும்.

health tips

வாய் சுகாதாரம் மற்றும் ஈறு நோய்களால் ஏற்படும் தாக்கம்

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் மற்றொரு முக்கியமான அறிகுறியாக ஈறுகள் பிரச்சனை மற்றும் வாய் சுகாதாரம் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனையின் போது அவை வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து உடலில் பொதுவான வீக்கத்தை ஏற்படுத்தி உடலுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க: கண் பார்வை குறைபாடா.? கவலை வேண்டாம்... இந்த ஒரு பானம் போதும்.!! சூப்பரான டிப்ஸ்.!!

வாய் சுகாதாரமும் மாரடைப்பும்

பொதுவாக இதய நோய்கள் ரத்த நாள பிரச்சனையால் ஏற்படுகிறது. ரத்த நாளத்திற்கும் வாயின் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரு நாடி என்பது இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய முக்கியமான ரத்த நாளமாகும் . இந்த நாளத்தில் அடைப்பு ஏற்படும் போது தான் இதய நோய் ஏற்படுகிறது. இந்த ரத்த நாளத்தில் வாய் சுகாதாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே வாய் மற்றும் ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்குரிய தீர்வு காண்பது சிறந்தது.

இதையும் படிங்க: அடடே... குப்பை மேனியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்.!!