"தூக்கம் இல்லைன்னா எல்லாமே குளோஸ்" - அவரை பார்த்து இதை செய்யாதீங்க.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!



Doctor Warning Do not Follow Japan Entrepreneur Sleeping 30 Minutes per Day 

 

ஜப்பான் நாட்டில் வசித்து வரும் என்டர்பர்னர் ஒருவர், தான் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே உறங்குகிறேன். இதனால் எனது உடல்திறன் நன்றாக இருக்கிறது 12 ஆண்டுகளாக இதனை கடைபிடிக்கிறேன் என கூறி இருந்தார். இதனால் பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். குறிப்பாக இளம் தலைமுறை அவரைப்போல நாம் முயற்சித்து பார்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த விஷயம் தவறு என அரசு மருத்துவர் கல்யாண சுந்தரம் எச்சரிக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர், நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தான் தூங்குவதாக தெரிவித்து இருக்கிறார். இதனை 12 வருடமாக அவர் மேற்கொள்வதாகவும் கூறுகிறார். அவர் சாப்பிடுவதற்கு முன்னதாக காபி எடுத்துக்கொள்வதாகவும் கூறி இருக்கிறார். இந்த விஷயம் வினோதமானது. 

இதையும் படிங்க: தாம்பத்திய விஷயத்தில் இருக்கும் குறைகளை உணவிலேயே சரி செய்யணுமா? அசத்தல் டிப்ஸ்.!

உறக்கம் முக்கியம்

இதனை அவரைப்போல நாம் செய்ய வேண்டும் என முயற்சிக்க வேண்டாம். ஏனெனில், தூக்கம் என்பது வாழ்க்கையில், உடலுக்கு கிடைத்த அதீத சக்தி ஆகும். தூக்கத்தில் மட்டுமே நமது உடல் உறுப்புக்கள் ஓய்வு எடுத்துக்கும். தொடர்ந்து ஓடக்கூடாது. 

இதய பிரச்சனை வரலாம்

தொடர்ந்து ஓடினால் நமது உடல் மெல்லமெல்ல செயலிழக்க தொடங்கும். மூளை பாதிப்பு பிரச்சனை ஏற்படலாம். நமது பொறுமை குறையும். இதயம் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்கும். ஏற்கனவே புகை, உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு இதய பிரச்சனை ஏற்படுவதைப்போல, உறக்கத்தை இழந்தாலும் அதே பிரச்சனை ஏற்படும். 

உலகளவில் புதிய வைரஸ்கள் அதிகம் பரவி வரும் நிலையில், உறக்கம் இல்லை என்றால் உடல் திறன் குறையும். ஜப்பானிய நபர் போல நாமும் செய்ய வேண்டும் என முயற்சித்தால், உங்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய இழப்பு நிச்சயம். அதனால், அதை யாரும் மேற்கொள்ள வேண்டாம். குறைந்தது நாளொன்றுக்கு 7 மணிநேரமாவது உறங்குங்கள். இன்று உறக்கத்தை இழந்தால், நாளை எதிர்காலத்தை இழக்க வேண்டியிருக்கும்" என கூறினார்.

இதையும் படிங்க: குடல் புண்களுக்கு அருமருந்தாகும் வெந்தயக்கீரை சாதம்; செய்வது எப்படி?.!