53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
வேலை காரணமா சரியா தூக்கம் வரலையா?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! மிஸ் பண்ணிடாதீங்க..!!
ஒரு நபர் குறைந்தது 7லிருந்து 8மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும். அதிலும் இரவுத்தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். இரவில் தூங்கும்போது தான் ஹார்மோன்களும், நொதிகளும் தங்களுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்.
பல்வேறு வேலை பளு மற்றும் மன உளைச்சல் காரணமாகவும் பலராலும் தற்போது நிம்மதியாக தூங்க முடிவதில்லை. தூக்கம் வர பல முயற்சிகளை மேற்கொள்வர். ஆனால் இரவு தூங்கப்போகும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் குடிப்பது நல்ல தூக்கத்தை கொடுக்கும் என்று ஆய்வு இருக்கிறது.
தேனில் இனிப்புசுவை மட்டுமில்லாமல், நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நீரேற்றம் பண்புகளும் நிறைந்து இருக்கின்றன. இதனால் தேன் பசியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க உதவுகிறது. தேனில் உள்ள மற்ற நன்மைகள் குறித்து காணலாம்.
எடை குறைப்பதில் உதவுகிறது :
உடல் எடையை குறைப்பதில் தேன் முக்கிய இடத்தில் இருக்கிறது. தேன் போன்ற பிரக்டோஸ் நிறைந்த உணவுகள் 10 மடங்கு கொழுப்பை குறைக்கிறது. அதே சமயம் ஸ்டாமினா அளவையும் அதிவேகமாக அதிகரிக்கிறது. இரவில் ஒரு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கி குடித்துவர எடைகுறைவதை கண்கூட காணலாம்.
தூக்கத்தை கொடுக்கிறது :
தேனை "தூக்க மருத்துவர்" என்று கூறலாம். படுக்க செல்லும் 30 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக்கொள்வது வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை கொடுப்பதனால், நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். வெதுவெதுப்பான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :
தேன் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது. பாரம்பரிய மருத்துவங்களில் தேன் பயன்படுத்தப்படுவதற்கான காரணம் காயங்களை ஆற்றுதல், தொண்டை கரகரப்பை குணப்படுத்துவது, தொற்று நோய்கள் வராமல் தடுப்பது என பல மருத்துவ பலன்கள் உள்ளது என்று கூறுகின்றனர்.