மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாட்டூ பதிவிட்டவர்கள் கவனத்திற்கு.. மறந்துடாதீங்க.. இல்லையென்றால் விபரீதம் தான்.!
இளைஞர்கள், இம்பெண்கள் என பலரும் தங்களின் கை, கால், உடல் பாகம் என விதவிதமாக டாட்டூக்களை பாதிக்க ஆர்வமாக இருந்து வருகின்றனர். இவர்களின் ரசனை மற்றும் விருப்பத்திற்கேற்ப டாட்டூக்கள் உடலில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சிலர், அதனை கவனமாகவும் பார்த்துக்கொண்டு வருகிறார்கள்.
டாடூக்களை பதித்த பின்னர், அதனை முறையாக பராமரிக்காத பட்சத்தில் அதன் பொலிவு சில மாதங்களிலேயே வெளிற தொடங்கிவிடும். டாட்டூக்களை பதித்தவர்கள் எப்படி அதனை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
டாட்டூ வரைந்த பின்னர் ஒரு வாரம் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். நீச்சல் பயிற்சியை தவிர்ப்பது நல்லது. மதுபானம் அருந்தும் பழக்கம் உடையவர்கள், டாட்டூவை வரைந்த மூன்று முதல் நான்கு நாட்கள் வரை மதுபானம் அருந்தாமல் இருக்கலாம்.
அவ்வாறு மீறி மதுபானம் அருந்தும் பட்சத்தில், மதுவில் உள்ள ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து டாட்டூவின் நிறத்தை மாற்றலாம். டாட்டூ வரைந்த ஒரு வாரம் கழித்து, டாட் வேக்ஸ் என்று அழைக்கப்படும் மாய்சரேசரை கொண்டு, டாட்டூ மீது மசாஜ் செய்ய வேண்டும். இதனால் டாட்டூ அழகாகும்.
டாட்டூ என்பது செயற்கையாக பதிவு செய்யப்படுவதால், சூரிய கதிர்கள் அதற்கு எதிரானது. சூரிய கதிர்கள் டாட்டூ மீது நேரடியாக படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். சூரிய கதிரில் இருந்து வெளிப்படும் புறஊதாக்கதிர்கள், டாட்டூ மூலமாக சருமத்தில் ஊடுருவி கேட்டினை ஏற்படுத்தும்.
டாட்டூவை உடலில் வரைந்துள்ளவர்கள், முடிந்தளவு இறுக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது. இறுக்கமான உடைகள் டாட்டூவின் மீது உராய்வை ஏற்படுத்தி, அதன் நிறத்தை வெளிறசெய்திடும்.