உஷார்.. நைட் ஷிப்ட் வேலையால் இரவு தூங்க மாட்டீங்களா?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! தூங்கலைன்னா இவ்வளவு பிரச்சனை வருமாம்..!!



night shift not sleeping problems

தற்போதைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினர் இரவிலும் உறங்காமல் கண்விழித்து போனை நோண்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பது தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் இரவு நல்ல தூக்கம் அவசியமான ஒன்றாகும்.

ஒரு இரவு நன்றாக தூங்கவிட்டால், அது அந்த நாள் முழுவதிலும் மனம் மற்றும் உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். மேலும் அந்த நாள் முழுவதுமான வேலையும் பாதிக்கப்படும். முறையற்ற வாழ்க்கை முறையால் பலர் தூக்கமின்றி பிரச்சனையை சிக்கி தவிக்கின்றனர்.

தினசரி வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இதனை சரி செய்ய இயலும். சில எண்ணெய் வகைகள் அல்லது எண்ணெய் உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இரவில் நன்றாக உறங்க முடியும். 

பல நாடுகளில் தூங்குவதற்கு முன்பாக நல்ல தூக்கத்தை பெற Chamomile டீ குடிப்பதை பரிந்துரைக்கின்றனர். அது போல இரவில் தூங்கப்போகும் முன் பால் குடிக்கப் பழக்கத்தையும் பலர் கொண்டுள்ளனர். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பலருக்கு தெரிவதில்லை. அவை குறித்து காணலாம்.

Night Shift

சீக்கிரம் தூங்கலாம் :

இரவு உறங்கபோகும் முன் பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் விரைவில் தூக்கம் வந்துவிடும். தூக்கத்தை சீராக்கும்.

தூக்க சுழற்சிக்கு உதவுகிறது :

பாலில் மெலட்டோனின் மற்றும் ட்ரிப்டோபன் இருக்கின்றன. இவை நன்றாக தூங்க உதவும். மூளை வெளியிடும் ஹார்மோனான மெலட்டோனின் நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதுபோல செரடோனின் உற்பத்திக்கு ட்ரிப்டோபனும் உதவுகிறது. இதுவும் நல்ல தூக்கத்தை கொடுக்கிறது.

ரிலாக்ஸாக வைத்திருக்கும் :

தூங்க செல்லும் முன் சூடான பால் குடிப்பது மனதை ரிலாக்ஸாக்கி அமைதிப்படுத்தும். எனவே இரவு தூங்கப்போகும் முன் பால் குடித்தால் ரிலாக்ஸாகி விரைவில் நன்றாக தூங்க இயலும்.