Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
பெற்றோராக மகன்களை நீங்கள் எப்படி கவனிக்க வேண்டும்?.. குழந்தைக்கு இதை கற்றுக்கொடுக்க மறந்துடாதீங்க..!
ஒவ்வொருவரும் தங்களின் இளம்பருவம் முதல் முதிர்பருவம் வரை பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டு இருப்போம். இதில், சில நமது அனுபவமாக அமையும். நாம் ஒவ்வொரு பருவத்திலும் கட்டாயம் படிக்க வேண்டிய அல்லது செய்ய வேண்டிய விஷயங்கள் என்பது உள்ளன. அதுகுறித்து இன்று காணலாம்.
ஐந்து முதல் எட்டு வயதிற்குள் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் தன்னையும் காத்துகொண்டு, பிறரையும் காப்பாற்ற இயலும். சைக்கிள் ஒட்டவும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். நீச்சல் மற்றும் சைக்கிள் உடலை பேலன்ஸ் செய்ய உதவும்.
பத்து வயதுக்கு பின்னர் குக்கரில் சாதம் வடிக்க, காய்கறி நறுக்க பழக்க வேண்டும். அதன்பின் எளிய முறையில் செய்யக்கூடிய தேங்காய், எலுமிச்சை, வெஜ் ரைஸ், தக்காளி சாதம் போன்றவற்றை எப்படி செய்வது என கற்றுக்கொடுக்க வேண்டும்.
அவர்கள் சாப்பிட்ட தட்டினை அவர்களையே சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் அப்படி செய்தால், அவர்களும் அதனையே செய்வார்கள். சமையல் பாத்திரத்தை கழுவிக்கொடுத்தால் சில சலுகை என கூறி, குழந்தைகள் அதனை செய்ததும் அவர்கள் கேட்டதை கொடுக்கலாம். இது அனைத்து வேலையிலும் அவர்களை ஈடுபாடு கொண்டவர்களாக மாற்றும்.
புத்தகங்களை வாசிப்பது என்ற விஷயத்தை கற்றுக்கொடுத்துவிட்டால் வீட்டிலேயே நூலகம் அமைத்துவிடுவார்கள். பெற்றோரின் பணம் உழைப்பால் வருகிறதே தவிர்த்து, பொத்தானை அழுத்தினால் பணத்தை தரும் ஏ.டி.எம் கிடையாது என்பதை உணர்த்துங்கள். சிறுவயதில் இருந்தே தனி சேமிப்புக்கு ஊக்குவியுங்கள்.
இரயில், பேருந்து பயணங்களில் பைசா கோபுரம் போல முன்புறத்தில் சாயாமல், கால்களால் நிமிர்ந்து இருக்க பழக்கப்படுத்த வேண்டும். ஆத்திரம் உச்சத்திற்கு ஏறும் நேரங்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிராளியின் வீட்டாரை இழிவுபடுத்தும் சொற்களை உபயோகிக்க பழக்கப்படுத்தாதீர்கள். அவ்வாறாக பேசுவது தமிழுக்கும், தனது வளர்ப்புக்கு இழுக்கு என்று உரையுங்கள்.