"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
"தீராத முதுகு வலியால் அவதியா.?" இதை மட்டும் செய்யுங்க.! வலி பறந்து போகும்.!
வயது வித்தியாசமின்றி இப்போது அனைவருக்கும் முதுகுவலி பிரச்சினை உள்ளது. அதிக வேலைப்பளு, நாள் முழுவதும் உட்கார்ந்து படி வேலை பார்ப்பது, சிசேரியன் செய்யும்பொழுது முதுகு தண்டுவடத்தில் ஊசி போட்டிருப்பது, முதுமை, உடற்பயிற்சி சரியான முறையில் செய்யாதது, சுளுக்கு, தசைப்பிடிப்பு என்று முதுகு வலிக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சிலவற்றை நம் கடைபிடிக்கும் பொழுது முதுகு வலி பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவது, நம் காலுக்கு பொருந்தாத வகையில் இருக்கும் காலணியை அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். டூவீலர் மற்றும் கார் போன்றவற்றை ஓட்டும்போது, நமது முதுகு தண்டு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது முதுகு வலி குறைவதற்கு உதவும். உடலில் சத்து குறைபாடு இருந்தாலும் முதுகு வலி வரலாம். எனவே வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்த உணவுகளான கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் குறைபாட்டால் முதுகு வலி ஏற்படக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்துள்ள பால் பொருட்கள், மீன், கீரைகள் போன்றவற்றை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் நீர் சத்து குறைந்தாலும் முதுகு வலி வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் நீராவது அருந்த வேண்டும். மருத்துவரின் பரிந்துரைப்படி எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம்.