சுகர் உள்ளவர்கள் ஆப்பிளை சாப்பிடலாமா?.. அதனால் சுகர் கூடுமா?..!



Sugar Patients Can Take Apple is Good for Health

நமது உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும் பழமாக இருப்பது ஆப்பிள். இது இந்தியா மட்டுமல்லாது, உலகளவிலும் அதிகளவு சாப்பிடப்படும் பழமாக உள்ளது. இதன் தனிசிறப்பு காரணமாக மேஜிக்கில் பழம் என்ற புனைபெயரும் ஆப்பிளுக்கு உண்டு.

ஆப்பிளில் இருக்கும் போதுமான அளவிலான ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு கூறுகள் நமது உடலுக்கு உதவி செய்கிறது. சிலரிடம் பொதுவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது. இது உண்மையா? என இன்று தெரிந்துகொள்ளலாம். 

ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : 

நமது உடலில் புதிய செல்கள் உருவாகுவதை ஆப்பிள் உறுதி செய்கிறது. சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கும் முக்கிய பங்கை ஆப்பிள் பெற்றுள்ளது. இது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 

health tips

பெக்டின் என்ற நார்ச்சத்தும் ஆப்பிளில் அதிகளவு இருக்கிறது. தினமொரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களுக்கான அபாயம் குறைகிறது. 

ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சத்து உடலுக்கு கட்டாயம் தேவைப்படும் ஒன்றாகும். மேலும், இரும்புசத்து மூலம் எலும்புகளுக்கு பலம் கிடைக்கிறது. இரத்த சோகை பிரச்சனை தடுப்படுகிறது.