மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்ட காஜல் - சூர்யா.. கணவர், குழந்தையை அறிமுகப்படுத்திய நடிகை.!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில், ஆதிகால தமிழர்களின் கதைக்கருவை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நவ.10 ல் கங்குவா தரிசனம்
மிகப்பெரிய பொருட்செலவில், பிரம்மாண்டமான எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ள திரைப்படம் பல்வேறு மொழிகளில் உலகளவில் வெளியாகிறது. இப்படம் வெளியீடுக்கு முன்பே ஓடிடி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை என பல கோடி வியாபாரமும் பார்த்துவிட்டது. வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: "சைபர் அடிமையாக வெளிநாடுகளில் சிக்கும் நபர்களை மீட்பது இந்தியா மட்டுமே" - நீயா நானா நிகழ்ச்சி வீடியோ வைரல்.!
மும்பையில் செட்டில் ஆன நட்சத்திர தம்பதி
நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களின் குழந்தைகள் படிப்பு வசதிக்காக மும்பையில் வீடு வாங்கி குடிபெயர்ந்தனர். அவ்வப்போது படப்பிடிப்பு உட்பட பிற விஷயத்திற்காக சூர்யா தமிழகம் வந்து செல்கிறார். இதனிடையே, நடிகை காஜல் அகர்வால் சூர்யாவை எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்தார்.
காஜல் - சூர்யா சந்திப்பு
மும்பை விமான நிலையத்தில் விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த சூர்யாவும், நடிகை காஜலும் நேரில் சந்திக்கொண்டனர். காஜல் தனது கணவர் கவுதம் என்பவரை கடந்த 2020 ல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் நெய்ல் (Neil) என்ற குழந்தை இருக்கிறார்.
நடிகர் சூர்யா - நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் கடந்த 2012 ம் ஆண்டு வெளியான மாற்றான் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kajal Aggarwal meets Suriya unexpectedly at Mumbai airport 🤩 Kajal's reaction is priceless 🥳 Wait till she introduced her husband to Suriya ❤️ pic.twitter.com/EZKtxOjtMf
— Viral Bhayani (@viralbhayani77) October 19, 2024
இதையும் படிங்க: வேட்டையன் வெற்றி விழா; தனது கைகளால் உணவு வழங்கிய நடிகை ரித்திகா சிங்.!