தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
துணை முதல்வர் உதயநிதி முன் பிழையுடன் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; எல்.முருகன், அதிமுக கண்டனம்.!
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, பிழையுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட காரணத்தால், மீண்டும் அப்பாடல் படப்பட்டபோதும், கண்டமிதில், புகழ்மணக்க ஆகிய வார்த்தைகள் தவறாக கண்டமதில், திகழ்மணக்க என உச்சரிக்கப்பட்டது.
இந்த விசயத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மைக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இரண்டாவது முறை பாடப்பட்டது. இதனை பெரிய விசயமாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரியே விடப்பட்டு பாடப்பட்டது, திமுக + காங்கிரஸ் கூட்டணியால் விமர்சிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குளத்தின் சீரமைப்பு பணிகளில் தரமற்ற கற்கள்? ஒப்பந்ததாரரை கடிந்துகொண்ட கனிமொழி எம்பி.!
உதயநிதி பதவி விலகுவாரா?
இந்நிலையில், இன்று உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியது கண்டனத்தை குவித்து இருக்கிறது. இந்த விஷயம் குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ள கண்டன அறிக்கையில், "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து. என்ன பதில் சொல்லப்போகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்? பதவி விலகுவாரா உதயநிதி ஸ்டாலின்?
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
கீழ்த்தரமான அரசியல்
டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?
தந்தை-மகன் பதில் சொல்லப்போவது என்ன?
தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா? தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?
இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா? நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, ‘‘இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக்கி விடாதீர்கள்’’ என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சனையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.
போலி திராவிட அரசியலை உணருங்கள்
ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? ஆளுநருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா? சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.
— Dr.L.Murugan (@Murugan_MoS) October 25, 2024
என்ன பதில் சொல்லப்போகிறார் முதலமைச்சர் @mkstalin..?
பதவி விலகுவாரா @Udhaystalin..?
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
உண்மையான தொழில்நுட்ப குறைபாடு கொண்டது உங்களின் ஆட்சிதான் என அதிமுக விமர்சனம்
மைக் வேலை செய்யலன்னா "கண்டமிதில்" கண்டமதில் ன்னும், "புகழ்மணக்க" திகழ்மணக்க ன்னுமா கேட்கும்?
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) October 25, 2024
உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா @Udhaystalin ?
உண்மையான Technical Fault உங்க ஆட்சி தான்!#TechnicalFaultஉதய் pic.twitter.com/qoCy760pig
இதையும் படிங்க: நிலத்தகராறில் பயங்கரம்.. காரைக்குடி மேயரின் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி ஆடியோ வைரல்.!