மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோடைகாலத்தில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக இதோ.!
கோடைகாலத்தில் குழந்தைகள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 கிலோ எடையுள்ள குழந்தை 1 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும். குழந்தைகளின் எடைக்கேற்ப அவர்களை தண்ணீர் குடிக்கவைக்க வேண்டும்.
அதேபோல காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு நீரில் ஊறவைத்து கழுவி கொடுக்க வேண்டும். செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையான மோர், நொங்கு, எலுமிச்சை சாறு போன்றவற்றை கொடுக்கலாம்.
அதேபோல உடல் சூட்டை அதிகரிக்கும் சிக்கன் போன்ற மாமிசத்தை வழங்காமல் மட்டன், மீன் போன்ற இறைச்சிகளை வாங்கலாம். இதனை அடிக்கடியும் கொடுக்கக்கூடாது. துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.
விளையாடிவிட்டு வந்த பின்னர் கை, கால்களை சுத்தம் செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு இயற்கையை ரசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். செயற்கையான பொருட்களான டிவி, மொபைல் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.