மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயர் ரத்த அழுத்தத்தால் அவதியா.? இந்தப் பாட்டி வைத்திய முறையை ட்ரை பண்ணி பாருங்க.!
இன்று இயந்திர மயமான இந்த உலகில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்படுகின்றனர். வேலைப்பளு தூக்கமின்மை முறையற்ற உணவுப் பழக்க வழக்கம் போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அதிக அளவு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. அதிக அளவு மருந்துகள் இல்லாமல் பாட்டி வைத்திய முறைப்படி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றிற்கு உணவு கட்டுப்பாடு நம்முடைய பழக்கவழக்கங்கள் ஆகியவை முக்கிய காரணமாக அமைகிறது. எளிய கை வைத்திய முறையில் உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என இந்த பதிவில் காண்போம்.
தேன் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர ரத்த அழுத்தம் கட்டுப்படும். இதேபோன்று கேரட் மற்றும் தேன் கலந்து குடித்தாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த தீர்வாக அமையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கேரட்டை சிறு துண்டுகளாக வெட்டி அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அவற்றுடன் நீர் கலந்து நன்றாக அரைத்த பின்பு அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இதேபோன்று இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து குடித்தாலும் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஒரு கிளாஸ் அளவு நீருடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் இதனை வடிகட்டி இவற்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.