நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
தீராத வயிற்றுவலி; திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் விபரீதம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு, வீராகவுடனஉண்டி கிராமத்தில் வசித்து வருபவர் சித்தராஜு. இவரின் மனைவி வினோதா (25). வினோதா கடந்த 2 ஆண்டுகளாகவே கடுமையான வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு இருக்கிறார்.
வயிற்று வலி
வயிற்று வலி சரியாக பல இடங்களுக்கு சென்றும் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், வயிற்று வலி பிரச்சனை சரியாகவில்லை. இதனால் வினோதா மனமுடைந்து காணப்பட்டு இருக்கிறார். இதனிடையே, நேற்று வீட்டில் யாரும் இல்லை.
இதையும் படிங்க: தண்ணீர் கேனில் தொடங்கிய தகராறு; திருமணத்தை நிறுத்திய மணமக்கள்.. உற்றார்-உறவினர்கள் சண்டையில் அதிர்ச்சி.!
தற்கொலை
அப்போது வயிற்று வலி ஏற்படவே, மனஉளைச்சலில் இருந்த யோகா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து வினோதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோதாவின் மறைவு அவரின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணத்துக்கு வற்புறுத்திய 22 வயது காதலி கழுத்து நெரித்து கொலை; நண்பர்கள் பேச்சைக்கேட்டு விபரீத செயல்?