திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
" என்கிட்டயே டைவர்ஸ் கேப்பியா.." விவாகரத்து கேட்ட மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.!!
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தனது சொந்த மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 ஆண்டுகளுக்கு முன் திருமணம்
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சந்தோசமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியது. சின்ன சின்ன குடும்ப சண்டைகள் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்க தொடங்கியது.
விவாகரத்திற்கு விண்ணப்பித்த மனைவி
அவ்வப்போது நடந்து வந்த குடும்ப சண்டை தினமும் ஒரு பிரச்சனையாக வெடிக்க தொடங்கியதால் விரக்தி அடைந்த இளம் பெண் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால் அந்தப் பெண்ணின் கணவர் விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: கட்டுக்கட்டா என் பொண்டாட்டி லஞ்சம் வாங்குறா: நேர்மையின் சிகரமாக பாசமிகு கணவர்.! ஆதாரத்துடன் போட்டுக்கொடுத்த சம்பவம்.!
மனைவியை பலமுறை பலாத்காரம் செய்த கணவன்
இந்நிலையில் சமீபத்தில் தனது மனைவியை பார்க்கச் சென்ற கணவன் அவரிடம் விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுமாறு கூறி மிரட்டி இருக்கிறார். அதற்கு அவரது மனைவி சம்மதம் தெரிவிக்காததால் அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இது தொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில் பலாத்காரம் செய்த கணவனை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி ஆசிட் ஊற்றிக் கொடூர கொலை; தந்தை-மகனாக படுபயங்கரம்.. நெஞ்சை நடுங்கவைக்கும் பேரதிர்ச்சி.!