மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஷவாயு தாக்கி விவசாயிகள் 3 பேர் பலி..!! மோட்டார் பம்ப்பை பழுது நீக்கியதால் சோகம்..!!
விஷவாயு தாக்கி விவசாயிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம், புலந்த்ஷஹர் மாவட்டத்திலுள்ள் ஜட்வால் கிராமத்தை சேர்ந்தவர்கள் கைலாஷ் (42), ஹன்ஸ்ராஜ் (38) மற்றும் அனில் (30). இவர்கள் மூவரும் விவசாயிகள். இந்த நிலையில் நேற்று காலை இவர்கள் மூவரும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர்.
வயலுக்கு சென்ற பிறகு மின் மோட்டாரை இயக்கி பார்த்ததில், மோட்டார் பம்ப் பழுதாகி இருப்பதை அறிந்தனர். இதனைத் தொடர்ந்து மோட்டார் பம்ப்பை பழுது பார்ப்பதற்காக 3 பேரும் கிணற்றில் இறங்கியுள்ளனர். கிணற்றில் இறங்கிய மூவரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தோர், கிணற்றின் அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் மூவரும் கிணற்றுக்குள் மயங்கி கிடந்துள்ளனர். இதன் பின்னர் மூவரையும் மீட்ட அவர்கள், சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் விவசாயிகள் 3 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.