நீண்ட நேர போராட்டம் தோல்வி.! ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.! சோக சம்பவம்.!
உத்திரபிரதேச மாநிலம் மெஹாபா மாவட்டம் குல்பஹார் பகுதியில் வசித்து வருபவர் பஹிராத். இவருக்கு நான்கு வயதில் தனேந்திரா என்ற மகன் இருந்துள்ளான். இந்தநிலையில், தனது மகனுடன் பஹிராத் தன்னுடைய வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவரது விவசாயம் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வயலில் விளையாடிக்கொண்டிருந்த தனேந்திரா, வயல் வெளியில் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதனை அறிந்த சிறுவனின் தாய் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுவனின் தந்தை பஹிராத் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
4-Year-Old Boy, Who Fell Into Borewell In UP Yesterday, Dies https://t.co/eRtAPb5IEZ pic.twitter.com/ByofvNxV0H
— NDTV (@ndtv) December 3, 2020
சிறுவன் ஆழ்துளை கிணற்றிற்குள் உயிருடன் இருப்பதை உறுதி செய்த பின்னர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு தனேந்திராவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த ஆழ்துளை கிணறு 30 அடி வரை இருக்கும் என தெரியவந்துள்ள நிலையில் உள்ளே இருக்கும் சிறுவனுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழிவினரின் 18 மணி நேர முயற்சி தோல்வியடைந்தது.