திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உறவினரின் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு வீடிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து! 6 பேர் பலி! பலர் படுகாயம்!
ஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வேன் மீது ட்ரக் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தில் உள்ள ராக்கி ஷாப்பூர் கிராமத்திற்கு அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது. சுலி பக்ரியன் கிராமத்தை சேர்ந்த மக்கள் வேனில் உறவினரின் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு வீடிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வேகமாக வந்த ட்ரக் வேன் மீது மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தால் வேன் நிலைகுலைந்து நின்றது.
#Haryana Road #Accident - 6 killed as van rams into truck in #Hisarhttps://t.co/DWuAsO3sfU pic.twitter.com/DuSI85uA1k
— YesPunjab.com (For Punjabi follow @BawaHs) (@yespunjab) February 17, 2020
விபத்து ஏற்பட்டபோது பலத்த சத்தம் கேட்டதால், அப்பகுதி பொதுமக்கள் விரைந்துவந்து வேனில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மீது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். பலியானவர்கள் ஹிஸார் மாவட்டத்திலுள்ள சுலி பக்ரியன் கிராமத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.