குடிபோதைக்கு அடிமையான தனது அம்மாவை காப்பாற்ற, 6 வயது சிறுமி செய்த கண்கலங்கவைக்கும் காரியம்!!
கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற பகுதியில் வசித்து வந்தவர் துர்காம்மா.இவருக்கு பாக்கியலட்சுமி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் துர்காம்மாவின் கணவருக்கு வேறு பெண்ணுடன் தகாத பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் மனைவி மற்றும் மகளை தனியாக விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் மனவேதனையில் இருந்த துர்காம்மா நாள்தோறும் குடித்துவிட்டு, மதுவிற்கு அடிமையாகி உள்ளார். மேலும் பணம் கிடைக்கும்போதெல்லாம் அந்த பணத்தை எல்லாம் குடிக்க செலவு செய்து வந்துள்ளார். இவ்வாறு அவர் அளவுக்கு அதிகமாக குடித்து வந்தநிலையில் துர்க்காம்மாவின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தனது தாய்க்கு தான்தான் உணவளிக்கவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், 6 வயது குழந்தை பாக்கியலட்சுமி தினமும் சாலையில் நின்று பிச்சை எடுத்து, அந்த பணத்தின் மூலம் தனது தாய்க்கு உணவு வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் குழந்தை நல அலுவலருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்து சிறுமியை தற்காலிகமாக காப்பகத்தில் தங்க வைத்து அவரது படிப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Koppal: A 6-year-old girl has been begging since the past week to feed her mother who is admitted to a hospital after she fell ill due to alcoholism. State Women & Child Welfare Department will now pay for the medical treatment of the woman & the education of the girl. #Karnataka pic.twitter.com/sdAeljrbOh
— ANI (@ANI) 28 May 2019